News September 12, 2025

திருப்பூர்: புத்த மத பயணத்திற்கு மானியம் பெறலாம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவித்த அறிக்கையில்: 2025, 2026 ஆண்டிற்கான தமிழகத்தை சேர்ந்த 150 புத்த மதம் சேர்ந்தவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சம், 5 ஆயிரம் ரூபாய் வீதம் நேரடி மானியமாக வழங்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல வாரிய அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். என தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

திருப்பூரில் நாளை விடுமுறை இல்லை

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(நவ.8) பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த அக். 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி வாரத்தில் அக்.22ம் தேதி, மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன்படி நாளை (8-ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது.

News November 7, 2025

திருப்பூரில் வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது!

image

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நித்திஷ் குமார் யாதவ்(18) என்பதும் அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News November 6, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் காங்கேயம் அவிநாசி பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

error: Content is protected !!