News September 12, 2025

அதிமுக கூட்டணியில் முக்கிய மாற்றம்.. பாஜக எடுத்த முடிவு!

image

டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், NDA கூட்டணி, உள்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா, JP நட்டா, BL சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்து விலகிய OPS, TTV-யை டெல்லிக்கு அழைத்து பேச பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும், ஒருங்கிணைப்பு விவகாரத்தில் EPS, திட்டவட்டமாக நோ சொல்லி வருவதால், அவரை சமாதானம் செய்யவும் ஒருபுறம் முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

Similar News

News September 12, 2025

அரசின் அடுத்த தீபாவளி பரிசு

image

EPFO 3.0 குறித்த கூட்டம், அக்டோபர் 2-வது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதில், PF Advance பெறுவது உள்பட முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம். குறிப்பாக, PF பணத்தை ATM-ல் எடுக்கும் நடைமுறை அமலாக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே PM மோடியின் தீபாவளி பரிசில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.

News September 12, 2025

விஜய்யுடன் கூட்டணி? கிருஷ்ணசாமி க்ரீன் சிக்னல்

image

எந்த கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ, அந்த கட்சியுடன் கூட்டணி என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜய் பங்கு தந்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் கிருஷ்ணசாமி பேசிவரும் நிலையில், தவெக – புதிய தமிழகம் கூட்டணி அமையுமா?

News September 12, 2025

ஹாட்ரிக் தோல்வியடைந்த உலக சாம்பியன் குகேஷ்!

image

FIDE Grand Swiss தொடரில், நடப்பு உலக சாம்பியன் குகேஷ் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளார். முதலில் கிரீஸ் நாட்டின் நிகோலஸ் தியோடரூ என்பவரிடமும், 2-வதாக USA-வின் அபிமன்யூ மிஸ்ராவிடமும்(16) குகேஷ் தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து, தற்போது துருக்கி கிராண்ட்மாஸ்டரான ஈடிஷ் குரேல்(17) என்பவரிடம் குகேஷ் தோல்வியடைந்துள்ளார். இத்தொடரில் அவர், 7 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளார்.

error: Content is protected !!