News September 12, 2025
குமரி: ஆழ்கடல் மீன் பிடியில் நாமதான் ராஜா!

குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள். இவர்களின் மீன்பிடி நுட்பங்கள், பல நாட்கள் கடலிலேயே தங்கி ஆழ்கடல் மீன்களை பிடிக்கும் வல்லமை ஆகியவை தனித்துவமானவை. டூனா, சுறா, மத்தி போன்ற பல்வேறு மீன் வகைகளைப் பிடித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றது. இது குமரி மாவட்ட மக்களின் ஒரு அரிய திறமை.
Similar News
News September 12, 2025
கன்னியாகுமரி மக்களே இந்த பக்கம் போகாதீங்க

கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் அணுகு சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
News September 12, 2025
குமரி: தண்ணீரில் இழுத்து செல்லபட்ட தொழிலாளி

சிதறால் வட்ட விளையை சேர்ந்தவர் சத்யமணி (54) இவர் தாமிரபரணி ஆற்றில் நேற்று குளிக்க சென்றார். அப்போது அவரை தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது. இதனால் அவர் புதர்களை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
News September 12, 2025
குமரி: ரூ.99 ஆயிரம் சம்பளத்தில் RBI வேலை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-ல் 120 கிரேட் பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளம் 55,200 – 99,750 வரை வழங்கபடுகிறது. செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இங்கு <