News September 12, 2025

அரியலூர்: தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழ்நாடு (EDII TN) சார்பில், தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ‘நிமிர்ந்து நில்’ நிகழ்ச்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சியாகத் தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தொடங்கி வைத்துள்ளார்.

Similar News

News September 12, 2025

பெரம்பலூர்: போலீசுக்கு கொலை மிரட்டல்

image

வெங்கனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்று இரவு ரோந்து பணியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடியைச் சேர்ந்த நவீன் மற்றும் இலந்தைக்கூடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்தார். மதுபோதையில் இருந்த அவர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

News September 12, 2025

அரியலூர்: சொந்தவீடு கட்ட போறீங்களா?

image

அரியலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <>இங்கு கிளிக் செய்து<<>> ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இனி ஆயிரம் கணக்கில் பணம் செலவு பண்ண தேவையே இல்ல! இதனை உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் திமுக கூட்டம்

image

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. செப்.15 அண்ணா பிறந்தநாள் உறுதிமொழி நிகழ்ச்சி, உறுப்பினர் சேர்க்கைக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் உள்ளிட்ட திமுக பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!