News September 12, 2025

இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்திய கிருஷ்ணகிரி இளைஞர்

image

கணபதி கிருஷ்ணன் ஒரு இந்திய தடகள வீரர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கோன் கவுண்டனூரை சேர்ந்தவர். இவர் பந்தய நடை (Racewalking) போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவிற்காகப் பங்கேற்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 12, 2025

கிருஷ்ணகிரி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)

News September 12, 2025

கிருஷ்ணகிரியில் கேன் தண்ணீர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News September 12, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து 1784 கன அடியில் இருந்து 2195 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தி.மலை ஆகிய மூன்று மாவட்டங்களின் தென்பெண்ணை ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!