News September 12, 2025
நாமக்கல் மக்களே SUPER வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, ஆட்சியர் கூறியது, ஏவெடிபொருட்கள் சட்டத்தின் கீழ், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர், விதிமுறைகளைப் பின்பற்றி, ஆன்லைன் மூலம் வருகிற அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறியுள்ளார் .
Similar News
News November 5, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்லவ 22652 சென்னை சென்ட்ரல் ரயிலிலும், நள்ளிரவு 1:20 மணிக்கு சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா செல்ல 06059 பரூனி ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன! நாமக்கல், பரமத்திவேலூர், காளப்பநாயக்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி, தொட்டியம், எருமப்பட்டி, பவித்திரம் சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
News November 5, 2025
நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
நாமக்கல்லில் அதிரடி மாற்றம்!

நாமக்கல் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி சேலம் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் அவா் பணியாற்றி வந்துள்ளாா். தற்போது, சென்னை வடக்கு மாவட்ட (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.எஸ்.எழிலரசி பதவி உயா்வு பெற்று நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


