News September 12, 2025
தேனியில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 ,2A, போட்டித் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பித்த தேனி மாவட்டத்தின் சார்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வருகின்ற 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
Similar News
News September 12, 2025
தேனி: 50% மானியத்தில் கிரைண்டர்!

தேனி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.
News September 12, 2025
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கலெக்டர் அறிவுறுத்தல்

தேனி: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் பதிவுகளை சரிபார்க்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறைக்கு அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தியுள்ளார்.
News September 12, 2025
சின்னமனூர் அருகே புதுப்பெண் ஓட்டம்

சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் அழகாபுரியை சேர்ந்தவர் அஜித் குமார் (25). இவருக்கும் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த நிவேதா (22),என்பவருக்கும் செப்.7 ல் திருமணம் நடைபெற்றது. கடந்த செப்.10 நள்ளிரவில் பாத்ரூம் செல்வதாக படுக்கையில் இருந்து எழுந்து சென்ற மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு (செப்.11) பதிவு செய்து விசாரணை.