News September 12, 2025
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு சிறை

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சார்ந்த ஏழுமலை என்பவர் அவரது மனைவி கலா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி மேற்கொண்ட வழக்கில் தென்காசி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டல் பபிதா ஏழுமலைக்கு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு.
Similar News
News September 12, 2025
தென்காசி: 50% மானியத்தில் கிரைண்டர்!

தென்காசி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.
News September 12, 2025
தென்காசி: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தென்காசி, சுரண்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெனிக்ஸ் குமார் மற்றும் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யாபுரம் பகுதியில் செந்தில் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருமலைகுமார் என்ற பெரிய கட்டை என இரண்டு நபர்களை தென்காசி எஸ்.பி உத்தரவின் பேரில் ஆட்சியர் கமல் கிஷோர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு.
News September 12, 2025
தென்காசி: எடப்பாடியை கண்டித்து போஸ்டர்

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மதுரை விமான நிலையம் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி அரசியல் ஆதாயம் தேடும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டிப்பதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.