News September 12, 2025
கரூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று (செப்.12) பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். லிங்கம்நாயக்கன்பட்டி பிக் பாஸ் மஹாலில், கீழவெளியூர் சமுதாயக்கூடத்தில், மணவாடி SKP மஹாலில் மற்றும் அத்திப்பாளையம் பகுதியில் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
கரூர்: வெறி நாய்கள் அட்டூழியம்!

கரூர்: பள்ளப்பட்டி பகுதியில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில், யாசர் அன்சாரி என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்தன. இந்தத் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
News September 11, 2025
கரூர்: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு!

கரூர் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
News September 11, 2025
கரூர்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

கரூர் பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <