News September 12, 2025
பணியாளர்களுடன் கலந்துரையாடிய முதல்வர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இரண்டு விரிவாக்கத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், ஒரு புதிய உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்து, அந்நிறுவனப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
Similar News
News September 12, 2025
கிருஷ்ணகிரியில் நூதன திருட்டு! மக்களே உஷார்…

கிருஷ்ணகிரி பில்லனக்குப்பத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செந்தில்குமார் (40), தனது செல்போனுக்கு வந்த அழைப்பின் மூலம் ஓடிபி எண்ணைக் கூறி ரூ.5.45 லட்சத்தை இழந்தார். சிம் கார்டு காலாவதி ஆகிவிட்டதாகக் கூறிப் பேசிய மர்ம நபர், ஓடிபி எண்ணைக் கேட்டதும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க!
News September 12, 2025
இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்திய கிருஷ்ணகிரி இளைஞர்

கணபதி கிருஷ்ணன் ஒரு இந்திய தடகள வீரர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கோன் கவுண்டனூரை சேர்ந்தவர். இவர் பந்தய நடை (Racewalking) போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடை பந்தயத்தில் இந்தியாவிற்காகப் பங்கேற்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News September 11, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது