News September 12, 2025
75 ஆம் ஆண்டு பவள விழாவில் பவளவிழா மலரை வெளியீடு

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, பவளவிழா மலரை வெளியிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், மற்றும் பல தலைவர்கள் உடன் பங்கேற்றனர்.
Similar News
News September 12, 2025
நாகையில் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்.19-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கேட்டுகொண்டுள்ளார்.
News September 11, 2025
நாகை மக்களே உஷார்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து உரம் தயாரிப்பது குறித்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.