News September 11, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 12, 2025
தேனியில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 ,2A, போட்டித் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பித்த தேனி மாவட்டத்தின் சார்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வருகின்ற 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
News September 12, 2025
ஆண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை

ஆண்டிபட்டி உயர்மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரமின், ராஜகோபாலன்பட்டி, பொமின்மிநாயக்கன்பட்டி, ஏத்தகோவில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை என தேனி TNEB SE அறிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தங்களது பணிகளை இதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம்.
News September 11, 2025
மாவட்ட, சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட சார்பு நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் செப்.13ம் தேதியன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தெரிவித்துள்ளார்.