News September 11, 2025
ஜிவி சம்பளம் வாங்காத படங்களின் லிஸ்ட்

காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சார்ந்த நல்ல கதை என்பதால், அப்படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடித்துள்ள பிளாக்மெயில் பட நிகழ்ச்சியில் பேசும்போது, வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால், அவர் இயக்கிய அநீதி படத்திற்கும், அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கும் சம்பளம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News September 12, 2025
ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு அதிர்ச்சி

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை தழுவியது. Hangzhou-ல் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 4வது, 31வது, 47வது, 56வது நிமிடங்களில் அந்த அணி வீராங்கனைகள் கோல் அடித்தனர். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடிக்க 4-1 என்ற கணக்கில் சீனா வெற்றியடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் நாளை ஜப்பான் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.
News September 12, 2025
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். *எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. *ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.
News September 12, 2025
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப முடிவு: உத்தவ் சிவசேனா

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை ஏற்க முடியாது என உத்தவ் சிவசேனா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ள நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது. போட்டி நடக்கும் நாளில் ‘சிந்தூர் ரக்சா’ என்ற பெயரில் போராட்டம் நடத்த போவதாகவும், அதில் பங்கேற்கும் பெண்கள் PM-க்கு குங்குமம் அனுப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.