News September 11, 2025
CM ஸ்டாலின் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80) இன்று காலமானார். சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின், ஆ.ராசா, அமைச்சர் பி.டி.ஆர். உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News September 12, 2025
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். *எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. *ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.
News September 12, 2025
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப முடிவு: உத்தவ் சிவசேனா

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை ஏற்க முடியாது என உத்தவ் சிவசேனா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ள நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது. போட்டி நடக்கும் நாளில் ‘சிந்தூர் ரக்சா’ என்ற பெயரில் போராட்டம் நடத்த போவதாகவும், அதில் பங்கேற்கும் பெண்கள் PM-க்கு குங்குமம் அனுப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
சாதிய கொடுமை தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலை விரித்தாடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் சாதிய கொடுமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். எனவே, ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.