News September 11, 2025

அதிமுகவின் முடிவுகளை அமித்ஷா எடுப்பாரா? ஆ.ராசா

image

பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டு விட்டதாக ஆ.ராசா விமர்சித்துள்ளார். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்று கேட்ட அவர், தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்க அதிமுக துடிப்பதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News September 12, 2025

சாதிய கொடுமை தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்

image

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலை விரித்தாடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் சாதிய கொடுமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். எனவே, ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

News September 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 456 ▶குறள்: மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. ▶பொருள்: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

News September 12, 2025

வெற்று விளம்பர திமுக ஆட்சி: நயினார்

image

4 ஆண்டு ஆட்சியில் திமுக அரசு வெற்று விளம்பரங்களை மட்டுமே செய்து வருவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை CM ஸ்டாலின் நிறைவேற்றாதது ஏன் என அவர், X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது திமுகவின் மற்றொரு போலி தேர்தல் வாக்குறுதி எனவும் விலைவாசியை உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!