News September 11, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவும் நேபாள கைதிகள்?

கடந்த 24 மணி நேரத்தில் நேபாள சிறைகளில் இருந்து 13,572 கைதிகள் தப்பியுள்ளதாக அந்நாட்டு போலீசார் அறிவித்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாகவும், குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களாகவும் இருக்கின்றனர். நேபாளத்தின் இன்றைய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சிறை கைதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், அது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 12, 2025
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப முடிவு: உத்தவ் சிவசேனா

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை ஏற்க முடியாது என உத்தவ் சிவசேனா தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ள நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் என உத்தவ் சிவசேனா கூறியுள்ளது. போட்டி நடக்கும் நாளில் ‘சிந்தூர் ரக்சா’ என்ற பெயரில் போராட்டம் நடத்த போவதாகவும், அதில் பங்கேற்கும் பெண்கள் PM-க்கு குங்குமம் அனுப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
சாதிய கொடுமை தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலை விரித்தாடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் சாதிய கொடுமைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். எனவே, ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
News September 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 456 ▶குறள்: மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. ▶பொருள்: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.