News September 11, 2025

இது மகளிரின் காலம்: ICC போட்ட புது ரூல்

image

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை வரும் 30-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. மகளிர் கிரிக்கெட்டில் வழக்கமாக ஆண்களும், பெண்களும் கலந்துதான் நடுவர்களாக செயலாற்றுவார்கள். ஆனால், இந்த WC-யில் புதிய மாற்றத்தை ICC கொண்டுவந்துள்ளது. அதன்படி, மகளிர் மட்டுமே நடுவர்களாக இதில் பங்கேற்க உள்ளனர். பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்த முன்னெடுப்பை செய்துள்ளதாக ICC தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 12, 2025

2026 தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

image

2026 தேர்தல் தொடர்பாக மநீம நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் வரும் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்திக்கவுள்ளார். இதில் 2026 தேர்தல் கூட்டணி மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் மநீம போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாஸிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 12, ஆவணி 27 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: திதித்துவம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை

News September 12, 2025

ஆசிய கோப்பை: இன்று பாக். Vs ஓமன்

image

ஆசிய கோப்பை தொடரில் இன்று குரூப் ஏ-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதுகின்றன. அணியில் பாபர், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லையென்றாலும் ஓமனை வீழ்த்தும் திறன் பாகிஸ்தானிடம் உள்ளது. எனவே, இந்த போட்டி One sided-ஆக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவை எதிர்கொள்ளும் முன்பாக இந்த மோதலை பயிற்சி ஆட்டமாக பாக். கருதும். அபு தாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

error: Content is protected !!