News September 11, 2025
டிரெண்டாகும் புதிய வகை ❤️காதல்❤️ இனி ‘No Pain’

Situationship, Flirtationship போன்றவற்றுக்கே அர்த்தம் புரியாத நிலையில், ‘Date them till you hate them’ என்ற புது டிரெண்ட் வந்துவிட்டது. பார்ட்னருடன் பிரச்னை ஏற்பட்டு, அது பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு போனால், சண்டை- சச்சரவு என டிராமா இல்லாமல் அமைதியாக கழண்டு கொள்ளலாமாம். இந்த பிரேக் அப் அவ்வளவு வலிக்காது என்றும், ‘அப்பாடா தப்பிச்சோம்’ என்ற உணர்வுதான் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
Similar News
News September 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 12, 2025
₹450 கோடியில் அமையும் தொழிற்சாலைக்கு CM அடிக்கல்

ஓசூரில் ₹450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் CM உறுதியளித்தார்.
News September 12, 2025
அடுத்த BCCI தலைவர் சச்சினா? அவரே கொடுத்த விளக்கம்

சச்சின் தான் அடுத்த BCCI தலைவர் என கடந்த சில நாள்களாக தகவல் பரவி வந்தது. ஆனால், இந்த தகவலை சச்சின் மறுத்துள்ளார். அவரது SRT Sports Management Private Ltd வெளியிட்ட அறிக்கையில், சச்சின் தொடர்பான வெளியான தகவல் தங்கள் பார்வைக்கு வந்ததாகவும், ஆனால் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.