News September 11, 2025

திருப்பத்தூர்: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

image

வாணியம்பாடியில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் (12.09.2025) தேதி ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி வட்டத்திற்க்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கோட்டாச்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைப்பெற உள்ளது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கோட்டாச்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News September 11, 2025

உதவி ஆய்வாளருக்கு எஸ்.பி பாராட்டு!

image

வாணியம்பாடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக செயல்பட்டதற்கு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். காவலர்கள் பலர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு இன்று (11-09-2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் ஒருவழிப் பாதையில் எதிர் புறமாக வாகனத்தை இயங்குவது சட்டப்படி குற்றமாகும். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சாலை விதிகளை மதிப்போம், விபத்து ஏற்படாமல் தடுப்போம் என செய்தி வெளியிட்டுள்ளது.

News September 11, 2025

திருப்பத்தூர்: வேளாண் பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உழவர் சேவை மையம் அமைக்க தமிழக அரசின் உழவர் நலத்துறை சார்பில், அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், பட்டப்படிப்பு படித்த 20 முதல் 45 வயதுவரை அரசு பணியில் இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த சேவை மையம் அமைக்க 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!