News September 11, 2025
விஜய்யிசத்துக்கு 100% கேரண்டி: ‘ஜனநாயகன்’ ஸ்பெஷல் அப்டேட்

தரமான சம்பவங்களுடன் ‘ஜனநாயகன்’ உருவாகி வருவதாக படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் தெரிவித்துள்ளார். படத்தில் விஜய்யிசத்தை 100% கேரண்டி என கூறிய அவர், அதற்கு பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். விஷாலின் ‘கதகளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரதீப்புக்கு ‘ஜனநாயகன்’ 25-வது படம். விசய்யிசத்தை பார்க்க நீங்க ரெடியா?
Similar News
News September 12, 2025
₹450 கோடியில் அமையும் தொழிற்சாலைக்கு CM அடிக்கல்

ஓசூரில் ₹450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் CM உறுதியளித்தார்.
News September 12, 2025
அடுத்த BCCI தலைவர் சச்சினா? அவரே கொடுத்த விளக்கம்

சச்சின் தான் அடுத்த BCCI தலைவர் என கடந்த சில நாள்களாக தகவல் பரவி வந்தது. ஆனால், இந்த தகவலை சச்சின் மறுத்துள்ளார். அவரது SRT Sports Management Private Ltd வெளியிட்ட அறிக்கையில், சச்சின் தொடர்பான வெளியான தகவல் தங்கள் பார்வைக்கு வந்ததாகவும், ஆனால் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
News September 12, 2025
உத்தராகண்டிற்கு ₹1,200 கோடி நிவாரணம்

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு PM மோடி ₹1,200 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். டேராடூனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்த அவர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்சாப்பிற்கு ₹1,500 கோடி, இமாச்சலுக்கு ₹1,600 கோடி அறிவித்து இருந்தார்.