News September 11, 2025
திருச்சி: தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ்

திருச்சி, திருவாரூர் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவர் மீது திருவாரூர் எஸ்.பி கருண் கரட் குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரைத்ததன் பேரில் பரத் திருச்சி மத்திய சிறையில் இன்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
Similar News
News September 11, 2025
திருச்சி: 4 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் மெமு ரயில் நான்கு தினங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மயிலாடுதுறையில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயிலானது வரும் செப்.12,13,14,15 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 11, 2025
திருச்சி: தவெக தலைவர் விஜய்க்கு 23 நிபந்தனைகள்

தவெக தலைவர் விஜய் திருச்சி சுற்றுப்பயணத்துக்கு 23 நிபந்தனைகள் விதித்து போலீஸ் அனுமதி அளித்துள்ளது. விஜய் நிர்ணயிக்கப்பட்ட நேரம் மட்டுமே பேச வேண்டும். மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பேசலாம். சாலைவலம், வரவேற்பு கூடாது. விஜய் வாகனத்துக்கு முன்,பின் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதி. டூ வீலர் அணிவகுப்பு கூடாது. நிபந்தனைகளை மீறினால் அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது
News September 11, 2025
திருச்சி: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டா? Call Now

திருச்சி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!