News September 11, 2025
விருதுநகர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

விருதுநகர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய <
Similar News
News September 12, 2025
பட்டாசு தொழிலாளி மீது போக்சோ வழக்கு

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (23). பட்டாசு ஆலை தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியை காதலிப்பதாக கூறி தனியாக வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். சைல்டு லைன் 1098 எண்ணுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 11, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள்

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்.13,14 அன்று 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் இனிவரும் மாதங்களில் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி திட்டப் பணிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
News September 11, 2025
விருதுநகர்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

விருதுநகர், விளாம்பட்டி சுப்பிரமணிபுரத்தை சேர்ந்த வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் வன்கொடுமை குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என SP கண்ணன் எச்சரித்துள்ளார்.