News September 11, 2025
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

சென்னையில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சுரன்ஸ் புதுபிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. அபராத நிலுவை தொகை ரூ.300 கோடி நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன பரிவாஹன் என அனைத்து இன்சூரன்ஸ் இணைந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 12, 2025
உத்தரவிட்டும் ஏன் கலைந்து செல்லவில்லை?- நீதிமன்றம் கேள்வி

தூய்மைபணியாளர்கள் போராட்டத்தின்போது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாக தூய்மை பணியாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர் தரப்புக்கு கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
News September 12, 2025
இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிக்கு அழைப்பு

சென்னையில் வரும் 13ம் தேதி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் சாமிநாதன் இன்று ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று, விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார். முதல்வரின் செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
News September 12, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.