News September 11, 2025

விழுப்புரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

விழுப்புரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025. SHARE பண்ணுங்க!

Similar News

News September 12, 2025

விழுப்புரம்: அரசு வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள மாணவர்கள் வேளாண் சார்ந்த பின்புலத்தில் வளர்வதால், வேளாண் படிப்பில் சேர விரும்புகின்றனர். இம்மாவட்ட மாணவர்கள் வேளாண் படிப்பிற்காக கோயம்புத்துார், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லுாரி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News September 12, 2025

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

image

விழுப்புரம் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது என, தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்; 1400 கட்டுமான தொழிலாளர்களுக்கு, திண்டிவனம், மொளசூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில், வரும் 15ம் தேதி இந்த பயிற்சி துவங்கும் எனவும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

சென்னை செல்லும் ரயில்களின் சேருமிடம் மாற்றம்

image

திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரம் வரை செல்லும் Rockfort Express, Madurai Express ரயில்கள், வருகின்ற செப்.17ம் தேதி முதல் பழையபடி சென்னை எழும்பூர் வரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் காரணமாக தாம்பரம் வரைச் சென்ற நிலையில், பணிகள் நிறைவடைந்ததால் செப்.17 முதல் எழும்பூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!