News September 11, 2025

பெரம்பலூர்: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

Similar News

News September 12, 2025

பெரம்பலூர்: மாணவியை பலாத்காரம் செய்தவபர் கைது

image

செட்டிகுளம் கடை வீதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (19). இவர் தற்போது பாடாலூரில் வாடகை வீட்டில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெகதீசன், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெகதீசனை நேற்று கைது செய்தனர்.

News September 12, 2025

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ள அறிய வாய்ப்பாக வரும் செப்.13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு சட்டப்பணி ஆணை குழுவை நேரிலோ அல்லது 04328- 296206/ 04328-291252 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW…

News September 12, 2025

பெரம்பலூர்: கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறையைச் சேர்ந்தவர் அந்தோணி. இவர் குளிப்பதற்காக அவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் அந்தோணியின் உடலை மீட்டனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!