News September 11, 2025

10-வது போதும்! மத்திய அரசில் ₹69,100 சம்பளத்தில் வேலை!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 455 Security Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18- 27 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கார் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 கட்டங்களாக தேர்ச்சி நடைபெறும். அதிகபட்சமாக ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News September 12, 2025

KYC-ஐ புதுப்பிக்க RBI கொடுத்துள்ள கெடு

image

சரியான நேரத்தில் உங்களின் வங்கிக் கணக்குக்கான KYC-ஐ புதுப்பிக்கவில்லை என்றால் கணக்கு செயலிழக்க வாய்ப்புள்ளது. வங்கி அமைப்பின் பாதுகாப்பை அதிகரிக்க KYC புதுப்பிப்பை RBI கட்டாயமாக்கியுள்ளது. KYC-ஐ புதுப்பிக்க, கிராமப்புறத்தில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள கிராம பஞ்சாயத்து முகாமுக்குச் செல்லலாம். செப்., 30-ம் தேதிக்குள் KYC புதுப்பிப்பது கட்டாயம் என RBI தெரிவித்துள்ளது.

News September 11, 2025

காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்கிறீர்களா?

image

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், காலையில் எழுந்திருக்க அலாரம் அவசியமாகிவிட்டது. ஆனால், அலார சத்தம் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டோக் வரும் ஆபத்தை அதிகரிப்பதாக விர்ஜீனியா ஸ்கூல் ஆப் நர்சிங் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அலாரம் வைக்காமல் தானாகவே எழும் பழக்கம் உள்ளவர்களை விட, அலாரம் வைத்து எழுந்திருப்பவர்களுக்கு BP அதிகரிக்கும் வாய்ப்பு 74%-மும், ஸ்ட்ரோக் வரும் ஆபத்தும் அதிகரிக்கிறதாம்.

News September 11, 2025

அடுத்தடுத்த மாநாடுகளை அறிவித்த சீமான்

image

ஏற்கனவே மரம், ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ள சீமான், அடுத்தடுத்த மாநாடுகளை அறிவித்துள்ளார். தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போவதாகவும், ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீமானின் அடுத்தடுத்த மாநாடுகள் குறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!