News April 11, 2024
உருவ கேலிக்கு ஆளானதாக பிரபல நடிகை வேதனை

உருவ கேலிக்கு ஆளானதாக நடிகை அபிராமி வேதனை தெரிவித்துள்ளார். விருமாண்டி, வானவில், சமுத்திரம், தோஸ்து உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர், தாம் உருவ கேலிக்கு ஆளான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “உயரமாக இருப்பதாக நான் உருவ கேலி செய்யப்பட்டேன். இதனால் பட வாய்ப்புகளும் பறி போனது. எனது தாடை மிக நீளமாக இருப்பதாகக் கூறி, இழுத்து பார்த்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
வியர்வையால் ஏற்படும் அட்டகாசமான நன்மைகள்

சம்மர் சீசனின் பெரிய பிரச்னையான வியர்வையால் சில நன்மைகளும் உள்ளது. ➤வியர்வை சுரப்பதால், உடலின் வெப்பநிலை குறைகிறது ➤வியர்வை சருமத்தை பளபளப்பாக்கும். கூடுதலாக சருமத்தின் செல்களுக்கு ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் ➤கடினமான உழைப்பால் தான், அதிகப்படியான வியர்வை வெளியேறும். அது இதயத்திற்கு நல்லதே. ஆனால், அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால் டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது. SHARE.
News April 10, 2026
FLASH: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்

அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2025-ல் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை பதவி நீக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தன. இந்நிலையில், அந்தப் பணம் தன்னுடையது அல்ல என மறுத்து வந்த அவர், தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
News April 10, 2026
நடிகை சுபாஷினி காலமானார்.. நெஞ்சை உலுக்கும் பதிவு

தமிழ் சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்தது சின்னத்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். யாராவது நெகட்டிவாக பேசினால் அந்த இடத்திலேயே சுபாஷினி இருக்கமாட்டார் என்று சக நடிகை அபிநவ்யா நினைவுகூர்ந்துள்ளார். இவ்வளவு மென்மையான இதயம் கொண்ட சுபாஷினியா இந்த முடிவை எடுத்தது என நெட்டிசன்கள் வருத்தமுடன் SM-களில் கூறி வருகின்றனர்.


