News September 11, 2025
உங்க போனில் உடனே இத பண்ணுங்க!

சாலையில் மயங்கி விழுந்தால், ஹாஸ்பிடலில் யாராவது சேர்த்து விடுவார்கள். ஆனால், போன் லாக் ஆகி இருப்பதால் உறவினர், நண்பர்களுக்கு தகவல் கொடுப்பது சிரமமாகிறது. இந்த சிக்கல் ஏற்படாமல் இருக்க Lock Screen-ல் Emergency contact வைத்திருக்க வேண்டும். இதை செய்ய, settings-> Emergency contacts செல்லுங்கள். அதில், Add contact-ஐ கிளிக் செய்து, நண்பர்கள், உறவினர்கள் நம்பரை Save பண்ணுங்க. Share it to friends.
Similar News
News September 11, 2025
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி… உங்க லிவரை பாருங்க

தொடர்ந்து, நீண்டகாலமாக மது அருந்துவது கல்லீரலை முற்றிலுமாக பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவர் அருந்தும் மதுவை கல்லீரல் முழுமையாக ஜீரணிப்பதுடன், அப்போது பல ரசாயனங்களையும் வெளிவிடுகிறது. இதன் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் பிரபல ‘லிவர் டாக்டர்’ சிரியாக் ஆபி பிலிப்ஸ், மதுவால் கல்லீரல் நோய் பாதித்த ஒருவரின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பின்பும் குடிக்க தோணுதா?
News September 11, 2025
இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாள தலைவர்

PM மோடி மீது தனக்கு நன்மதிப்பு உள்ளதாக நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவர் சுசீலா கார்கி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், போராட்டத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவிப்பதே தனது முதன்மையான பணி என கூறியுள்ளார். அதேபோல் சுசீலாவை இடைக்கால தலைவராக ஏற்றுக் கொண்ட Gen Z போராட்ட குழு, அடுத்த 6 மாதத்திற்குள் பொதுத்தேர்தலை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.
News September 11, 2025
குழந்தை பிறந்த பின் வயிறை பழைய நிலைக்கு மாற்றணுமா?

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பலவிதமான உடல் மாற்றங்களை எதிர்கொள்வர். அதில் பொதுவான பிரச்னை தொப்பை தான். உங்கள் வயிறை பழைய நிலைக்கு மாற்ற சில வழிகள் இருக்கிறது. ➤பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்புகள் என சமநிலையான உணவை உட்கொள்வது அவசியம் ➤வயிற்று தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம் ➤Stress ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் ➤போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். SHARE.