News September 11, 2025
IND Vs PAK போட்டியை ரத்து செய்ய முடியாது: SC

செப்.14-ல் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரின் இந்தியா – பாக்., போட்டியை ரத்து செய்ய கோரி SC-ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க SC மறுத்துள்ளது. அத்துடன், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது என்றும் SC தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்போட்டியை கொண்டாடுவது, ராணுவ வீரர்கள், உயிரிழந்தவர்களது குடும்பங்களின் தியாகத்தை அவமதிப்பது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
Similar News
News September 11, 2025
குழந்தை பிறந்த பின் வயிறை பழைய நிலைக்கு மாற்றணுமா?

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பலவிதமான உடல் மாற்றங்களை எதிர்கொள்வர். அதில் பொதுவான பிரச்னை தொப்பை தான். உங்கள் வயிறை பழைய நிலைக்கு மாற்ற சில வழிகள் இருக்கிறது. ➤பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்புகள் என சமநிலையான உணவை உட்கொள்வது அவசியம் ➤வயிற்று தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம் ➤Stress ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் ➤போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். SHARE.
News September 11, 2025
CM ஸ்டாலின் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80) இன்று காலமானார். சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின், ஆ.ராசா, அமைச்சர் பி.டி.ஆர். உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
News September 11, 2025
அதிமுகவின் முடிவுகளை அமித்ஷா எடுப்பாரா? ஆ.ராசா

பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டு விட்டதாக ஆ.ராசா விமர்சித்துள்ளார். அதிமுகவில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அமித் ஷா முடிவு செய்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது ஏன் என்று கேட்ட அவர், தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்க அதிமுக துடிப்பதாகவும் சாடியுள்ளார்.