News September 11, 2025
முருகதாஸை விட SK-க்கு அதிக சம்பளம்?

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘மதராஸி’ படம் தியேட்டர்களில் அளவான ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, AR முருகதாஸ் – ₹30 கோடி, சிவகார்த்திகேயன் – ₹40 கோடி, வித்யூத் ஜம்வால் – ₹4 கோடி, ருக்மினி வசந்த் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் தலா ₹3 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
Similar News
News September 11, 2025
ரேஷன் அட்டைதாரர்களே! தேதி குறிச்சு வச்சுக்குங்க!

உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அரசு திட்டங்களை பெற ரேஷன் அட்டை முக்கிய ஆதாரமாக உள்ளது. இத்தகைய சூழலில் ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விரும்புவோருக்கு செப்.13-ம் தேதி முகாம் நடைபெறுகிறது. இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல், தொலைபேசி எண் மாற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடத்தப்படும் இந்த முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News September 11, 2025
திராட்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

திராட்சைப் பழமாக இருந்தாலும், உலர்ந்த திராட்சையாக இருந்தாலும் ஒரே மாதிரியான மருத்துவ குணங்கள் உள்ளன. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு திராட்சை அளிக்கிறது. தொடர்ந்து திராட்சை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் பல நன்மைகளும் கிடைக்கின்றன. அதை பட்டியலிட்டு மேலே போட்டோஸாக வரிசைப்படுத்தியுள்ளோம். Swipe செய்து திராட்சையின் மகிமைகளை அறிந்துகொள்ளுங்கள்.
News September 11, 2025
விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

தொடர்ச்சியாக விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை, சீமான் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், விஜய் மக்களை சந்திக்கும் பயணத்தையும் சாடியுள்ளார். மக்களை சந்திப்பது என்பது அவர்களுக்கு பிரச்னை ஏற்படும்போது துணை நிற்பதுதான் என அவர் கூறியுள்ளார். ‘Road show’ சென்று வெறுமனே கை காட்டுவது மக்கள் சந்திப்பது இல்லை என்றும், இது வேட்டையாடும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்டும் சிங்கம் எனவும் கிண்டலடித்துள்ளார்.