News September 11, 2025

தி.மலை: மான் வேட்டையாடிய நபர் கைது

image

தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் பகுதியில் மான் வேட்டை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழு ரோந்து சென்றது. அப்போது, வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான பெருமாள் என்பவர் மான் வேட்டையாடியது தெரியவந்தது. அவரிடமிருந்து மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வனத்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News September 11, 2025

அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் முன்னிலையில் இன்று (11.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 11, 2025

தி.மலை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

தி.மலை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025. SHARE பண்ணுங்க!

News September 11, 2025

5 டன் விதைகள் விற்பனை செய்ய தடை

image

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கலசபாக்கம், கீழ்பென்நாத்தூர் ஆகிய வட்டரங்களில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா நேற்று ( செப்டம்பர் 10) ஆய்வு மேற்கொண்டார். அப்போது வைக்கப்பட்டிருந்த விதை குவியல்களில் 20 விதை மாதிரிகளில் முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை அற்ற ஐந்து டன் விதைகள் கண்டறியப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!