News April 11, 2024
சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டிய நிலையில் 6-வது மற்றும் கடைசி அணியாக சென்னை எப்.சி.(27 புள்ளிகள்) பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. 3 வருடத்துக்கு பிறகு பிளே-ஆப் சுற்றுக்கு செல்கிறது சென்னை அணி.
Similar News
News August 15, 2025
MH-ஐ ஆண்மையற்றதாக மாற்றுகிறார்கள்: சிவசேனா MP

சுதந்திர தினத்தில் மும்பையின் சில பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனா (UBT) MP சஞ்சய் ராவத், அரிசி சோறும் நெய்யும் சாப்பிட்டு சத்ரபதி சிவாஜி போருக்குச் செல்லவில்லை, இறைச்சி சாப்பிட்டே சென்றார் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மகாராஷ்டிராவை ஆண்மையற்றதாக மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 15, 2025
கவர்னர் மாளிகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் R.N.ரவி மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த குழந்தைகள் உள்பட பலருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, காந்தி நினைவிடத்திற்குச் சென்று பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். <<-se>>#HappyIndependenceday<<>>
News August 15, 2025
‘கூலி’ OTT ரிலீஸ் அப்டேட்!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆரவாரமாக வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் <<17409522>>வசூலில் <<>>பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர முடியாத நிலை உள்ளது. அவர்கள் படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ள நிலையில், படம்
செப்டம்பரில் முதல் வாரத்தில் OTT-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. நீங்க படத்தை எதில் பார்க்க போறீங்க?