News September 11, 2025
தி.மலை: லிப்ட் கொடுத்து, மூதாட்டியிடம் வழிப்பறி

ஆரணி ஒண்டிகுடிசை கிராமத்தில் மலர்(60) என்ற மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் லிப்ட் கொடுப்பதாக கூறி அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 11, 2025
அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் முன்னிலையில் இன்று (11.09.2025) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News September 11, 2025
தி.மலை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

தி.மலை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 11, 2025
5 டன் விதைகள் விற்பனை செய்ய தடை

திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கலசபாக்கம், கீழ்பென்நாத்தூர் ஆகிய வட்டரங்களில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா நேற்று ( செப்டம்பர் 10) ஆய்வு மேற்கொண்டார். அப்போது வைக்கப்பட்டிருந்த விதை குவியல்களில் 20 விதை மாதிரிகளில் முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மை அற்ற ஐந்து டன் விதைகள் கண்டறியப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது.