News September 11, 2025
திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் துாதில்லா ஸ்ரீதர்பாபு, நேற்று(செப்.10) திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க விழாவில் பேசியதாவது ’ஐந்து ஆண்டுகளுக்கு, யூனிட்டுக்கு, ரூ.2 மின்சார மானியம் வழங்கப்படும். ஏழு ஆண்டுகள் வரை, ஜி.எஸ்.டி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். போக்குவரத்து மானியமாக, 25 சதவீதம், அதிகபட்சம் 75 சதவீதம் வரை, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்’ என்றார்.
Similar News
News November 7, 2025
திருப்பூரில் நாளை விடுமுறை இல்லை

திருப்பூர் மாவட்டத்தில் நாளை(நவ.8) பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த அக். 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி வாரத்தில் அக்.22ம் தேதி, மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன்படி நாளை (8-ம் தேதி) திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் செயல்படும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது.
News November 7, 2025
திருப்பூரில் வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நித்திஷ் குமார் யாதவ்(18) என்பதும் அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News November 6, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் காங்கேயம் அவிநாசி பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்


