News September 11, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோ ரூ.110- ஆக நிர்ணயம்!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

Similar News

News September 11, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

News September 11, 2025

நாமக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

நாமக்கல் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<> இங்கே கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 188.20 மிமீ மழை பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் செப்-11ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: எருமப்பட்டி 5 மி.மீ, குமாரபாளையம் 10.80 மி.மீ, மோகனூர் 6.50 மி.மீ, நாமக்கல் 6 மி.மீ, பரமத்திவேலூர் 4 மிமீ, புதுச்சத்திரம் 43 மி.மீ, ராசிபுரம் 5 மி.மீ, சேந்தமங்கலம் 41 மி.மீ, திருச்செங்கோடு 36.40 மி.மீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 28 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 2.50 மி.மீ என மொத்தம் 188.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது

error: Content is protected !!