News April 11, 2024

புதுவை காங்கிரஸ் தலைவர் ரம்ஜான் வாழ்த்து 

image

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம்  ரம்ஜான் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள். இஸ்லாத்தில் ஐந்து ஒழுக்க நெறிகளில் ஒன்றாக நோன்பு உள்ளது. ரம்ஜான் மாத காலத்தில் பிறரை மன்னித்தல், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள நபிகள் நாயகம் வலியுறுத்தினார். இதனால் ரம்ஜான் மாதத்தில் உடல் தூய்மையுடன் உள்ள தூய்மையும் பெறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 18, 2026

புதுச்சேரி: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்கள்

News January 18, 2026

புதுச்சேரி: முன்னாள் தலைமை நீதிபதி மரணம்

image

புதுச்சேரியை சேர்ந்தவர் தாவீது அன்னுசாமி(99). இவர் முன்னாள் புதுவை தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நீதிபதி. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தாவீது அன்னுசாமி நேற்று உயிரிழந்தார். இவர் பெத்திசெமினார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தார். மேலும் இவரது உடலை அரசு மரியாதை உடன் அடக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழந்துள்ளது.

News January 18, 2026

புதுச்சேரி: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

image

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!