News April 11, 2024
அரசியலில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் விலகல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால், அரசியலில் இருந்து கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி விலகியுள்ளார். கடந்த தேர்தலில் சிக்கபள்ளாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இம்முறையும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த மொய்லி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Similar News
News April 25, 2025
BREAKING: இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து!

இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
News April 25, 2025
BREAKING: கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோ EX தலைவர் கஸ்தூரி ரங்கன் (80) காலமானார். பெங்களூரில் உள்ள இல்லத்தில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மேலும் மாநிலங்களவை எம்பியாக 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலும், திட்ட கமிஷன் உறுப்பினராகவும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். RIP.
News April 25, 2025
MRK பன்னீர் செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

வருமானத்திற்கு அதிகமாக ₹3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 2006-11 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.