News September 11, 2025

குமரி: பட்டாசு கடை அமைக்க விண்ணப்பியுங்க…

image

குமரியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 11, 2025

குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

குமரி: விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழி மாற்றம்

image

சிங்கவனம் – கோட்டையம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 20ம் தேதி மாலை 5:20 மணிக்கு புறப்படுவது ஆலப்புழா வழியாக செல்லும். சிங்களூர் கோட்டயம் செல்லாது நாகர்கோவில் கோட்டயம் ரயில். இம்மாதம் 20ம் தேதி புறப்படுவது சங்கனாச்சேரி கோட்டயம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

News September 11, 2025

குமரி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

image

கொல்லங்கோடு சுதர்சன், கீதாகுமாரிக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கீதாகுமாரி குழந்தைக்காக சிகிச்சையில் இருந்தார். குழந்தை இல்லாத வேதனையில் கீதாகுமாரி செப்.9.ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுக்குறித்து கொல்லங்கோடு போலீசார் விசாரணை.

error: Content is protected !!