News September 11, 2025

சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். ▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். ▶️மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

Similar News

News September 11, 2025

சென்னை மெட்ரோ பச்சை வழித்தட சேவையில் தற்காலிக மாற்றம்

image

மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை (செப்.15 -19) வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, காலை 5 மணி முதல் 6 மணி வரை இந்தப் பகுதியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 6 மணி முதல் வழக்கமான அட்டவணைப்படி சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

பூவை ஜெகன் மூர்த்தி கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

image

சிறுவனை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது வழக்கு விசாரணை செப்.17 ஒத்திவைக்கப்பட்டது.

News September 11, 2025

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சுரன்ஸ் புதுபிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. அபராத நிலுவை தொகை ரூ.300 கோடி நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன பரிவாஹன் என அனைத்து இன்சூரன்ஸ் இணைந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!