News September 11, 2025
WhatsApp-ல் இத பேசிடாதீங்க; அப்புறம் ஜெயில் தான்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் WhatsApp-ல் சில விஷயங்களை பேசினால் நீங்கள் கைது கூட செய்யப்படலாம். ➤சட்டத்துக்கு புறம்பான விஷயங்களை பேச வேண்டாம் ➤வெறுப்பு பேச்சு/அவதூறு கருத்துகளை பகிரக்கூடாது ➤மற்றவர்களின் படைப்பை உங்களுடையது என Claim பண்ணாதீங்க ➤பாலியல் தொந்தரவு கொடுக்க வேண்டாம். இந்த விஷயங்களை WhatsApp-ல் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் செய்யாமல் இருங்கள். SHARE.
Similar News
News September 11, 2025
ராகுல் காந்திக்கு உயிர் மீது அக்கறை இல்லையா?

வெளிநாடு செல்லும் போதெல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவதாக ராகுல் காந்திக்கு CRPF கடிதம் எழுதியுள்ளது. யாரிடமும் சொல்லாமல் திடீரென வெளிநாடு செல்வதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, 2020 – 2022-ல் 113 முறை புரோட்டோகால்களை மீறியதாக கடந்த 2022-ல் CRPF குற்றஞ்சாட்டியது. ராகுலுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News September 11, 2025
Beauty: 1 வாரத்தில் கருவளையம் நீங்க செம்ம டிப்ஸ்!

அதிக Stress, டென்ஷனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துவிட்டதா? கருவளையம் வந்துவிட்டதே என எண்ணி மேலும் Stress ஆகுறீங்களா? கவலையவிடுங்க. இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருவளையம் நீங்கும். SHARE.
News September 11, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? வெளியான தகவல்

திருச்சியில் நாளை மறுநாள் விஜய் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தவெகவினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் விஜய்-க்கு செல்வாக்கு இருப்பதும், இதில், திருச்சி கிழக்கில் போட்டியிட்டால் அவரின் வெற்றி உறுதி எனவும் தெரியவந்துள்ளது. இதனால்தான், திருச்சியை மையமாக வைத்து, பரப்புரையை தொடங்குகிறாராம்.