News April 11, 2024
ரோஸ் சர்பத் செய்வது எப்படி?

வெயில் காலத்தில் ஏற்படும் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் ரோஜாப்பூவுக்கு உண்டு. மேனியை மின்ன வைக்கும் ரோஸ் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். பன்னீர் ரோஜா இதழ்கள், முந்திரி, ஏலக்காய், இளம் தேங்காய் துண்டுகள், தேன் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிக்கட்டி சாறாக எடுத்து, அதில் நட்ஸ் & சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Similar News
News November 13, 2025
நவம்பர் 13: வரலாற்றில் இன்று

*1935 – பாடகி பி. சுசீலா பிறந்தநாள். *1947 – சோவியத் யூனியன் AK-47 துப்பாக்கியை வடிவமைத்தது. *1958 – எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பிறந்தநாள். *1984 – நடிகர் விக்ராந்த் பிறந்தநாள். *1985 – கொலம்பியாவில் எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர். *1993 – இலங்கையின் ராணுவ கூட்டுத்தளங்களை தாக்கி, ராணுவ தளவாடங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர்.
News November 13, 2025
PAK குண்டு வெடிப்பு: அச்சத்தில் இலங்கை வீரர்கள்

பாகிஸ்தானில் PAK vs SL ODI தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அங்கு <<18263443>>கார் குண்டு வெடிப்பு<<>> நடந்ததால், இலங்கை வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதனால், உடனே நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டனர். ஆனால், அதை மறுத்த வாரியம், தொடர் முடியும் வரை அங்கேயே இருக்க ஆணையிட்டுள்ளது. பாதுகாப்பு வழங்குவதாக பாக்., கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 13, 2025
எமினெம் பொன்மொழிகள்

*இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் அடைவதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. *காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமே, நீங்கள் தான் அதற்கு பொருள் கொடுக்கிறீர்கள். *ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்குப் பின்னாலும் அவரை வெறுப்பவர்களின் கூட்டம் உள்ளது. *அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. *இந்த தருணத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அனைத்தும் எப்போது முடிந்து போகும் என்று உங்களுக்குத் தெரியாது.


