News September 11, 2025
மாணவிக்கு பாலியல் தொல்லை மளிக்கடைக்காரர் கைது!

வேலூர் அருகே வசிப்பவர் குப்பன் ( 58). மளிகைக்கடை நடத்தி வருகிறார். 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கதறி அழுதபடி தனது தாயாரிடம் கூறினார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து குப்பனை நேற்று கைது செய்தார்.
Similar News
News September 11, 2025
வேலூர்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

வேலூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
வேலூரில் துவக்கி வைத்த அமைச்சர்

வேலூர் மாநகராட்சி மண்டலம் 4, சேண்பாக்கம் செல்வ விநாயகர் திருமணமண்டபத்தில் இன்று (செப்.11) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு சொத்து வரி (ம) மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News September 11, 2025
போதை மாத்திரை பயன்படுத்தி 15பேரிடம் விசாரணை!

குடியாத்தம் டவுன் போலீசார் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாடி கிராமம் முல்லை நகர் பகுதியில் நின்றிருந்த 4 பேரிடம் விசாரணை செய்தனர். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது . அவர்கள் ஆன்லைனில் மாத்திரை வாங்கி 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு போதை மாத்திரை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் இன்று அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.