News September 11, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1. R.R.திருமண மண்டபம், கொல்லூர்
2. மகாலட்சுமி மண்டபம், பனமலைபேட்டை
3. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகம், ஓமந்தூர்
4. அன்னை ரங்கநாயகி திருமண மண்டபம், அசோகபுரி
5. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், கொண்டங்கி
6. வள்ளி அண்ணாமலை திருமண மண்டபம், செஞ்சி
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
Similar News
News September 19, 2025
விழுப்புரம்: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 19, 2025
விழுப்புரம்: கண்டெய்னர் லாரி மோதி இளைஞர் பலி

விழுப்புரம்: அதனூர் கூட்ரோடு அருகே நேற்று (செப். 18) நடந்த சாலை விபத்தில், சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தீனதயாளன் (27) உயிரிழந்தார். சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மீது உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News September 19, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. 8th, SSLC, +2, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!