News September 11, 2025

குமரி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா??

image

குமரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

Similar News

News September 11, 2025

குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

image

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<> இங்கே கிளிக் செய்யவும்<<>>. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 11, 2025

குமரி: பட்டாசு கடை அமைக்க விண்ணப்பியுங்க…

image

குமரியில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 10ம் தேதிக்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

குமரி: விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழி மாற்றம்

image

சிங்கவனம் – கோட்டையம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இவ்வழிதடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 20ம் தேதி மாலை 5:20 மணிக்கு புறப்படுவது ஆலப்புழா வழியாக செல்லும். சிங்களூர் கோட்டயம் செல்லாது நாகர்கோவில் கோட்டயம் ரயில். இம்மாதம் 20ம் தேதி புறப்படுவது சங்கனாச்சேரி கோட்டயம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

error: Content is protected !!