News September 11, 2025
புதுகை: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டால் Call Now

புதுகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
புதுக்கோட்டை: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
புதுகை : நாளை எங்கெல்லம் முகாம் தெரியுமா?

புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெருங்கொண்டான் விடுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வந்தனாக்கோட்டை, அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி, அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம், அரிமளம் ஒன்றியம் இசேவை மையக்கட்டிடடம், பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் சமுதாயகூடம் உள்ளிட்ட இடங்களில் நாளை(செப்.12) நடக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
News September 11, 2025
புதுகை: அம்பேத்கார் உருவ சிலைக்கு முன் திருமணம்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு முன் விடுதலை கட்சி நிர்வாகி சிறுத்தை சிவா தலைமையில், கணபதிபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி மகேஷ்வரன்-பிரியா ஆகியோர் மாலை மாற்றி ஜாதி மறுப்பு திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.