News September 11, 2025
செங்கல்பட்டில் வேலை வேண்டுமா? இங்கு போங்க

செங்கல்பட்டு அடுத்த ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வரும் செப்.13-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். இதில், 10th, 12th, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 044- 2742 6020, 94868 70577 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். (வேலை தேடுபவர்களுக்கு SHARE)
Similar News
News September 11, 2025
செங்கல்பட்டு: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

செங்கல்பட்டு மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை அலர்ட்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று(செப்.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியால் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.
News September 11, 2025
சிட்லப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

நாமக்கல்லைச் சேர்ந்தவர் கந்தன் (26). இவர் சிட்லப்பாக்கம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வீடு அடித்தளம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிட்லப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.