News September 11, 2025
கட்சி பொறுப்பில் இருந்து கூண்டோடு நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உச்சம் தொட்ட நிலையில், கோவையில் 3 தலைவர்களை கூண்டோடு நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் VMC மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை குறிவைத்து தலைமை நகர்ந்தாலும், நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் விவகாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
Similar News
News September 11, 2025
உடலுறுப்பு தானம் செய்வோருக்கு கல்வெட்டு

மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உடலுறுப்பு தானம் செய்வோரின் பெயர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கல்வெட்டாக வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்டோர் உடலுறுப்பு தானம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 11, 2025
ரிலீஸாகி மூன்றே ஆண்டில் ரீரிலீஸாகும் படம்

தமிழ் சினிமாவில் ரீரிலீஸ் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், 2022-ல் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் செப்.19-ல் ரீரிலீஸாகிறது. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபீல் குட் படமாக வெற்றி பெற்ற இப்படத்தை மீண்டும் தியேட்டரில் கொண்டாடுவர் என படக்குழு நம்புகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 11, 2025
இதவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கு: அன்புமணி

கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அன்புமணியிடம் கேட்டதற்கு, ‘இதைவிட எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது’ என பதிலளித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் பாலு விரிவாக இது பற்றி விரிவாக பேசுவார் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பாமக விதிகளின் படி நிறுவனரான ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என பாலு கூறியுள்ளார்.