News September 11, 2025
சேலம்: நடுரோட்டில் பீர் பாட்டில் சண்டை!

வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (38). வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இருவரும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை முன், நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு குத்திக்கொண்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வாழப்பாடி போலீசார், இருவரையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.
Similar News
News September 11, 2025
சேலம்: தமிழ் கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ்!

சேலம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ் அருமை பெருமைகளையும், அதன் தொன்மையும், எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.
News September 11, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்.12- ஆம் தேதி அன்று மட்டும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616), மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (66617) முற்றிலும் ரத்துச் செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (16843) மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 11, 2025
சேலம்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

சேலம் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <