News September 11, 2025

செப்.12 சேலத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள் ▶️குருவம்பட்டி ஆனந்த கவுண்டர் மண்டபம் குருவம்பட்டி ▶️தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபம் கண்ணனூர்▶️சர்க்கார் கொல்லப்பட்டி செல்வி பொன்னுசாமி திருமண மண்டபம் சர்க்கார் கொல்லப்பட்டி▶️வாழப்பாடி வேல்முருகன் திருமண மண்டபம் வாழப்பாடி ▶️கஞ்சநாயக்கன்பட்டி சுப்பிரமணி திருமணம் ஹால் கஞ்சநாயக்கன்பட்டி▶️ நங்கவள்ளி தானிய கிடங்குவளாகம் (நரியம்பட்டி)

Similar News

News September 11, 2025

சேலம் 1 லட்சத்தை கடந்த உரிமைத்தொகை மனுக்கள்!

image

கடந்த மாதம் 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் சேலத்தில் துவங்கியது. இந்த முகாமில் அனைத்து விதமான குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளன. அதன்படி, நேற்று வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1,01,726 மனுக்கள் குவிந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

சேலம்: தமிழ் கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு சான்றிதழ்!

image

சேலம் அரசு சட்டக் கல்லூரியில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழ் அருமை பெருமைகளையும், அதன் தொன்மையும், எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News September 11, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

image

ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்.12- ஆம் தேதி அன்று மட்டும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616), மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (66617) முற்றிலும் ரத்துச் செய்வதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் (16843) மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையங்களில் நிற்காது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!