News September 11, 2025
விழுப்புரம்: நொடியில் நேர்ந்த சோகம்

விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் நேற்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது வழியில் மயங்கி கீழே விழுந்தார். பொதுமக்கள் மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 11, 2025
விழுப்புரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

விழுப்புரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 11, 2025
சர்வதேச இளைஞர் தின மாரத்தான் ஓட்டம்

விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச இளைஞர் தின விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின், பேசுகையில் கல்லுாரிகளில் செயல்பட்டு வரும் செஞ்சுருள் சங்க மாணவர்கள் மூலம், பால்வினைய், காசநோய் மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டம் நடந்ததாக கூறினார்
News September 11, 2025
விழுப்புரம்: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

விழுப்புரம் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <